"சந்திரயான் 3 ஒரு பாலத்தை கடக்கும்போது லாரி டிரைவர் எவ்வளவு மன அழுத்தத்தை எடுக்க வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள். அதே ஆகஸ்ட் 23 மாலை 5 மணிக்கு நிலவில் தரையிறங்கும், அன்றைய தொலைக்காட்சி நேரலையில் பாருங்கள்" என்று சுமார் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய வெவ்வேறு வகையான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ராட்சத ராக்கெட் ஒன்றை லாரி ஒன்று பாலத்தின் மேல் இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் அதனை ஆய்வு செய்தோம். அப்போது, அக்காணொலி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது போன்று தெரிந்தது. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.
Fakar Sukmaludin ஃபேஸ்புக் பதிவு
அப்போது, Fakar Sukmaludin என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் Spintires: MudRunner என்ற கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதாக பதிவிட்டுள்ளார். அதில், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற அதே லாரி மற்றும் ராக்கெட் உள்ளது. மேலும், இதனைக் கொண்டு யூடியூபில் தேடுகையில் இதே போன்ற பல்வேறு காணொலிகள் Spintires: MudRunner என்ற பெயரில் பலராலும் பதிவிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக சந்திரயான் மூன்றை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லும் ஓட்டுநர் அதனை மன அழுத்தத்துடன் இயக்குவதாக கூறி வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது கம்ப்யூட்டரில் விளையாடக்கூடிய Spintires: MudRunner எனும் கேம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.