“காணக்கிடைக்காது கானொலி....... தாஜ்மஹால் கட்டியபோது........” என்ற கேப்ஷடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தாஜ்மஹால் கட்டுமானப் பணி நடைபெறுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. தாஜ்மஹால் 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது. அக்காலத்தில் காமிரா கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் அதன் கட்டுமானத்தை காணொலியாக பதிவு செய்திருக்க முடியாது.
தொடர்ந்து, காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Ai_Dance99 என்ற யூடியூப் சேனலில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி, “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தாஜ்மஹாலின் கட்டுமான பணிகள்” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு முதற்கட்டமாக இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும், அதன் யூடியூப் டிஸ்கிரிப்ஷன் பகுதியிலும், இது செயற்கையாக உருவாக்கப்பட்ட காணொலி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இக்காணொலியை Hive Moderation மற்றும் True Media உள்ளிட்ட இணையதளங்களில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், இரு தளங்களும் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றே முடிவுகளைத் தந்தன.
Hive Moderation தளத்தின் ஆய்வு முடிவு
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தாஜ்மஹாலின் கட்டுமானப் பணிகளின் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.