கடந்த ஜனவரி 14-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இதில், மூன்று வயது குழந்தை பட்டத்தோடு இழுத்துச் செல்வது போன்ற 50 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த குழந்தை இந்த விபத்திலிருந்து தப்பியதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி நடைபெற்ற சம்பவம் என்று தைவான்நியூஸ்(Taiwannews) செய்தி நிறுவனம் வைரலாகும் காணொலியுடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தைவானின் நான்லியாவ் மீனவத் துறைமுகத்தில்(Nanliao Fishing Port) சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. தனது தாயுடன் இத்திருவிழாவில் கலந்துகொண்டு மூன்று வயது சிறுமியை, பட்டத்தின் வால் பகுதி காற்றில் இழுத்துச் சென்றுள்ளது.
சில மீட்டர்கள் உயரே சென்றதும் கீழே உள்ளவர்கள் பார்த்து துரிதமாக பட்டத்தை தரையை நோக்கி இழுத்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. பிபிசி உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்களும் இதே செய்தியை வெளியிட்டுள்ளன. மேலும், இச்சம்பவத்தை உறுதிபடுத்தும் விதமாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
இறுதியாக நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அகமதாபாத் பட்ட திருவிழாவின் போது மூன்று வயது குழந்தை பட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்டதாக பரவும் காணொலி பொய் என்பதும், அது தைவானில் நடைபெற்றது என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.