தற்போது துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் போது தன்னுடன் பிறந்த சகோதரன் பசியால் அழுவதைக் கண்ட சகோதரி பாலூட்ட முயலுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பிற மொழிகளிலும் இதே காணொலி வைரலானது தெரியவந்தது. அதில், சில காணொலிகளில் anelya.495 என்ற டிக் டாக் கணக்கின் பெயர் இருந்தது.
anelya.495 என்ற பெயருடன் வைரலாகும் காணொலி
தொடர்ந்து, டிக் டாக்கில் anelya.495 என்ற பயனர் குறித்து தேடியபோது, 2022ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தற்போது வைரலாகும் அதே காணொலி "குழந்தைகள் சிரிப்பு(மொழிபெயர்ப்பு)" என்ற கேப்ஷனுடன் அந்த டிக்டாக் கணக்கில் பகிரப்பட்டிருந்தது. மேலும், அதில் பாலூட்ட முயலும் குழந்தையின் பிற காணொலிகளும் அதே கணக்கில் பகிரப்பட்டு இருந்தது.
2022ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பகிரப்பட்ட டிக்டாக் காணொலி
Conclusion:
இறுதியாக, துருக்கி நிலநடுக்கத்தின் போது பசியால் அழுவதைக் கண்ட சகோதரி குழந்தைக்கு பால் குடுப்பது போன்று பரவும் காணொலி 2022ஆம் ஆண்டு பகிரப்பட்ட பழைய காணொலி என்பதும், அதற்கும் துருக்கி நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை என்பதும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.