ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தையை அவரது வீட்டில் சந்தித்தார் எனவும், அவரது வீடு எளிமையாக இருப்பதாகவும் 1 நிமிடமும் 30 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் வலதுசாரியினர் பலரும் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்கானொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ரெட்டிட் பக்கத்தில் ஜக்கிரமேஷ் என்பவர், "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தனது கவிதை மூலம் சுதந்திர உணர்வைத் தூண்டிய புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 96 வயது மருமகனுடன் நிர்மல் சீதாராமன்" என்று இதே காணொலியுடன் பதிவிட்டிருந்தார்.
இத்தகவலைக்கொண்டு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமூக வலைதளப் பக்கங்களில் ஆய்வு செய்தபோது, "நிர்மலா சீதாராமன் வாரணாசியில் உள்ள சிவ மடத்திற்குச் சென்று, மகாகவி பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி. கிருஷ்ணன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடினார்" என்று கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காணொலியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், இதே பதிவினை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார்.
Conclusion:
இறுதியாக, நமது தேடலின் மூலம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் தந்தையை அவரது வீட்டில் சந்தித்தார் என்று பரவும் காணொலி பொய்யானது. உண்மையில், அக்காணொலியில் இருப்பவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 96 வயது மருமகன் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.