"ஸ்டாலினின் பேரன்.சபரீசன் மகன்" என்ற கேப்ஷனுடன் சிறுவன் ஒருவன் அதிக நகைகள் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
இப்புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பேரன் என்றும், அவரது மருமகனான சபரீசனின் மகன் என்றும் கூறி சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஹர்ஷ்வர்த்தன் பந்தார்கர்(Harshvardhan Pandharkar) என்பவருடைய பின்ட்ரஸ்ட்(Pinterest) பக்கம் கிடைத்தது. அதில், தற்போது வைரலாகும் அதே நபர் பல விதமான நகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
மேலும், இத்தகவலைக்கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ஹர்ஷ்வர்த்தன் பந்தார்கரின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அதில், தற்போது வைரலாகும் அதே புகைப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரது மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கில் தான் மராட்டிய மாநிலம் பூனேவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சபரீசன் மகனின் புகைப்படத்தை இணையத்தில் தேடினோம். ஆனால், புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.
Conclusion:
நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் இருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பேரனும், அவரது மருமகனான சபரீசனின் மகன் இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.