"அரபுக்கள் நாம்? இரண்டு பேரல் குரூட் ஆயில் உங்க கிணத்தில் இருந்து எடுத்து தர்றீங்களா திருமா?" என்று ஒரு வலதுசாரி ஆதரவாளர் பதிவிட்டுள்ளார். அதே போன்று "அரபுக்கள் நாம்... அரபுக்களுக்கு இந்தியாவில் என்ன வேலை, பாரத தேசத்தை கூறு போட நினைப்பவர்கள், இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்....????? தொடக் கூட முடியாது.....!!!" என்று மற்றொரு வலதுசாரி ஆதரவாளரும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படியாக 'அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்' என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஒரு புத்தகத்தை வெளியிடுவது போன்ற புகைப்படத்தை பல்வேறு வலதுசாரிகளும் பதிவிட்டு வருகின்றனர்.
பகிரப்பட்டு வரும் பொய்யான புகைப்படம்
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், "தலித், முஸ்லிம், கிறிஸ்தவ கூட்டு செயல்பாடு! இந்தியாவின் முகத்தை மாற்றும்! பாரதத்தின் அடையாளத்தை சிதைக்கும்! இதற்கு கம்யூனிஸ்டுகள் திராவிட இயக்கங்கள் உறுதுணை! என்பதற்கு அரபுக்கள் நாம் என்கிற புத்தகத்தை வைத்துள்ள இவர்களே சாட்சி! தமிழக இந்துக்கள் நடுநிலையாளர்கள் விழிப்புணர்வுடன் இருப்போம்" என்ற கருத்துடன் அதே புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Fact-check:
இது குறித்த உண்மைத் தன்மையை அறிவதற்காக ஃபோட்டோ ஃபோரன்சிக் முறையில் புகைப்படத்தை ஆய்வு செய்த போது புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக கீவர்ட் சர்ச் செய்து பார்த்த போது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை குமணன் சாவடியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக நடந்த 'பாசிசம் முறியடிப்போம்' எனும் மாநாட்டில் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகிய இருவரும் இணைந்து 'இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். இப்புத்தக வெளியீட்டு விழாவின் புகைப்படத்தை திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'அரபுக்கள் நாம்' என்ற வார்த்தை இல்லை. மேலும், இது வலதுசாரிகளால் பரப்பப்படும் பொய் பரப்புரை எனத் திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் புத்தகத்துடன் வீடியோ பதிவிட்டு உள்ளனர்.
திருமாவளவனின் விளக்கப் பதிவு
Conclusion:
இறுதியாக, திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா இணைந்து வெளியிட்ட 'இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்' என்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை 'அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்' என்று புத்தகத்தின் தலைப்பை எடிட் செய்து வலதுசாரிகள் பொய் பரப்புரையை செய்கின்றனர் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.