" 'திடீர் மாநிலத்தலைவர்' மீது பாரம்பரிய ஆன்மீக ஆட்கள் அதிருப்தியில் இருப்பதற்கு காரணம் என்ன என்று விசாரித்து போது ஜிலீர் ரக தகவல்களாகக் கொட்டுகின்றன. காதலர் தினக் கொண்டாட்டங்களையே கடுமையாக எதிர்க்கக்கூடிய ஒரு கட்சியில் தன்பால் ஈர்ப்பை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதுவும் இது தனிப்பட்ட வாழ்க்கையின் பாலியல் தேர்வாய் இருந்தாலும் பரவாயில்லை. கட்சிக்குள்ளேயே கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் புயலிலிருந்து தன் தலைமையின் கீழ் பணிபுரியக்கூடிய இளைஞர்கள் வரை பலருடன் பாத்தி கட்டி விளையாடி வருகிறாராம் இந்த விவசாயி." என்று விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டதாக புகைப்படம் ஒன்றை திமுகவினர் உள்பட பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
இதன் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தன்பாலின ஈர்ப்பாளர் போன்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச்(கூகுள் சர்ச் முடிவு) செய்து பார்த்தபோது, விகடன் அப்படி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், விகடன் இணையத்தில் முழுமையாக தேடியபோது ``கோபாலபுரம் பாய்ஸைவிட மாட்டேன்; இதுவரை நடந்த ஊழல்களுக்கு அக்கவுன்ட் கேட்பேன்!" - அண்ணாமலை" என்ற தலைப்பில் தருமபுரியில் கடந்த ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதை சமீபத்தில் விகடன் செய்தியாக வெளியிட்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது. பரவி வரும் செய்தி போன்று எதுவும் விகடன் இணையதளத்திலும் இல்லை. பொதுவாக விகடனில் "மிஸ்டர் கழுகார்" பக்கத்தில் அரசியல் கிசுகிசு வெளியிடப்படும். அதிலும், அவ்வாறான செய்திகள் வெளியாகவில்லை என்பது நமது தேடலில் தெரியவந்தது.
தொடர்ந்து, விகடன் இணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் நியூஸ்மீட்டரிம், "தற்போது பரவி வரும் செய்தியை நாங்கள் வெளியிடவில்லை, சோர்ஸ்கோடை எடிட் செய்து சிலர் இவ்வாறாக பரப்பி வருகின்றனர். இது போன்று பல முறை நடந்துள்ளது" என்று விளக்கமளித்தார்.
Conclusion:
நமது தேடலின் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தன்பாலின ஈர்ப்பாளர் போன்று சித்தரித்து விகடன் செய்தி வெளியிட்டதாக பரவும் புகைப்படம் பொய் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.