Fact Check: மராட்டிய முதல்வருக்கு மாற்றுத்திறனாளி பெண் காலால் திலகமிட்ட நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றதா?

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிக்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது காலால் திலகமிடுவதாக வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  11 Dec 2024 10:07 PM IST
Fact Check: மராட்டிய முதல்வருக்கு மாற்றுத்திறனாளி பெண் காலால் திலகமிட்ட நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றதா?
Claim: மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது காலால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிற்கு திலகமிட்டார்
Fact: இத்தகவல் தவறானது. இந்நிகழ்வு தேவேந்திர பட்னாவிஸ் 2023ஆம் ஆண்டு மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்தபோது நடைபெற்றது

நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநில முதல்வராக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில், “A physically handicapped girl performed Aarti for Devendra Fadnavis who was elected as the Chief Minister of Maharashtra. Both are great! மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் க்கு காலால் ஆரத்தி எடுக்கும் மாற்றுத்திறனாளி பெண் ! இதற்கெல்லாம் பெரிய மனது வேண்டும்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. காணொலியில், கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தேவேந்திர பட்னாவிஸிற்கு தனது காலால் திலகம் இடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்ற பிறகு நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இந்நிகழ்வு 2023ஆம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக இருந்தபோது நடைபெற்றது என்று தெரியவந்தது.

இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி Patrika ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.


Patrika வெளியிட்டுள்ள செய்தி

அதன்படி, “ஊனமுற்றோருக்கான Deepstambh அறக்கட்டளையின் முயற்சியைப் பார்வையிட மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஜல்கானுக்குச் சென்றார். அப்போது, அங்கு இரு கைகள் இல்லாத பெண் ஒருவர் காலால் அவருக்கு திலகமிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Times Now Marathi ஊடகமும் அதே தேதியில் வெளியிட்டுள்ளது.

மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் தற்போது வைரலாகும் காணொலியை பதிவிட்டு உருக்கமான பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கைகள் இன்றி காலால் திலகமிட்டு ஆசீர்வதித்தது மனதை உலுக்குவதாக தெரிவித்துள்ளார்‌”

Conclusion:

முடிவாக, நம் தேடலில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிக்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது காலால் திலகமிடுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2023ஆம் ஆண்டு அவர் துணை முதல்வராக இருந்த போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:மகாராஷ்டிரா முதல்வருக்கு காலால் திலகமிட்ட மாற்றுத்திறனாளி பெண்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. இந்நிகழ்வு தேவேந்திர பட்னாவிஸ் 2023ஆம் ஆண்டு மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்தபோது நடைபெற்றது
Next Story