"பாலஸ்தீன குழந்தைகள் கிழக்கு காசாவில் தண்ணீர் தொட்டியின் அருகே நின்று தண்ணீர் பிடித்து கொண்டிருந்த போது, இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகள் வான்வழியாக ஏவுகனைக் குண்டுகளை வீசி கொடூரமாக கொன்ற அநீதி அக்கிரமம்" என்ற கேப்ஷனுடன் ட்ரோன் மூலம் ஒரு பகுதியை ராணுவம் தாக்கும் வான்வழி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, NoiseAlerts என்ற எக்ஸ் பக்கத்தில் "RSF படைகள் மீது சூடான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அருகில் இருந்த எரிபொருள் தீப்பற்றி மக்களை தீக்கிரையாக்கியது" என்ற தகவலுடன் வைரலாகும் காணொலியை பதிவிட்டிருந்தனர். மேலும், RetroProxyGroup என்ற ரெட்டிட் பயனரும் இதே தகவலுடன் வைரலாகும் காணொலியை பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து இது குறித்து தேடுகையில், Al-Jazeera - Sudan ஊடகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதே காணொலியை வெளியிட்டிருந்தது. அதில், "சூடானின் கார்டூம் பகுதியில் உள்ள Rapid Support Force-க்கு சொந்தமான எரிபொருள் தொட்டியை சூடான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்கி அழித்தது" என்று கூறப்பட்டுள்ளது.
Al-Jazeera Sudan ஃபேஸ்புக் பதிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக தண்ணீர் தொட்டியின் அருகே நின்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேலிய ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் சூடான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் காணொலி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.