"மதினாவில் நேற்று நபி ஸல்லல்லாஹு அவர்களின் ஹராம்ஷரிப்புக்கு மிக அருகில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நாட்டவருக்கும் அங்குள்ள அரபிகளுக்கும் இடையில் கை கலப்பு" என்று சிலர் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொள்ளும் 51 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நியூஸ் அராப் என்ற செய்தி நிறுவனம் 2019ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "மதினாவில் உள்ள அல் கமாமா என்ற மசூதிக்கு வெளியே இஃப்தாரின் போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அடிதடியில் ஈடுபட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அதே ஆண்டு மே 17ஆம் தேதி அல்பவாபா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, "சண்டைக்கான காரணங்கள் தெளிவாக இல்லை. ஆனால், உணவு பரிமாறப்படுவதற்கு முன்பு இருக்கையில் அமர்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக சில உள்ளூர்வாசிகள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக மொராக்கோ வேர்ல்ட் நியூஸ் என்ற செய்தி நிறுவனமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளது.
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தானியருக்கும் அரேபியர்களுக்கும் இடையே கைகலப்பு என்று பரவும் தகவல் தவறானது. உண்மையில் அது அப்பகுதியைச் சேர்ந்த சில அரேபியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட தகராறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.