Fact Check: நெருப்பை வெளியிடும் பறவை தான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு காரணம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

கண்களிலிருந்து நெருப்பை வெளியிடும் பறவை தான் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீக்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  23 Jan 2025 3:48 PM IST
Fact Check: நெருப்பை வெளியிடும் பறவை தான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு காரணம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
Claim: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீக்கு கண்களில் இருந்து நெருப்பை உமிழும் பறவை தான் காரணம்
Fact: தகவல் தவறானது. இந்த காணொலி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது

சமீபத்திய தகவலின்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் அழித்துள்ளன மற்றும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் (Archive) பரவி வருகின்றன.

இந்நிலையில், இக்காட்டுத்தீக்கு நெருப்பை வெளியிடும் பறவைதான் காரணம் என்ற கேப்ஷனுடன், நெருப்பை வெளியிடும் பறவையின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெண்கல நிற தோள், கருப்பு மார்பகங்கள் மற்றும் வெள்ளை வயிறு கொண்ட ஒரு பறவை அதன் கண்களில் இருந்து நெருப்பை வெளியிடுவது போன்ற காட்சி அக்காணொலியில் இடம்பெற்றுள்ளது.


Fact-check:

நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் அக்காணொலி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி Fabricio Rabachim என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டுள்ளது. அவர் தன்னை சுயமாக கற்றுக்கொண்ட தொழில்முறை விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) கலைஞர் என்று சேனலின் டிஷ்கிரிப்ஷன் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

தான் விளம்பரம் மற்றும் சினிமா ஆகிய இரண்டிலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கொண்டு வைரலாகும் காணொலியும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.



மேலும், இவரே வைரலாகும் காணொலியைப் போன்றே பல்வேறு இயற்கைக்கு மாறான பண்பியல்புகளுடன் பறவைகள் மற்றும் மீன்கள் போன்றவற்றை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கி அதனை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக வைரலாகும் காணொலியை “கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் தான் உருவாக்கினேன்” என்று AFP Fact Check ஊடகத்திற்கு Fabricio Rabachim மின்னஞ்சல் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.



நம் தேடலின் முடிவாக லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீக்கு காரணமான கண்களில் இருந்து நெருப்பை வெளியிடும் பறவை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸ் பகுதியில் கண்களிலிருந்து நெருப்பை வெளியிடும் பறவை தான் காட்டுத் தீக்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:தகவல் தவறானது. இந்த காணொலி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது
Next Story