“நம்ம சாப்பாட்டு ராமன் கோவில் கும்பாபிஷேகத்துல..... பக்தர்களுக்காக நடக்கும் ஏற்பாடுகள்.... அதுல 1 Western Toiletடையும் வச்சிருக்கானுங்க பாருங்க…” என்ற கேப்ஷனுடன் பொதுவெளியில் மறைவின்றி இருக்கும் கழிவறையின் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக இவ்வாறான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரீவ்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, #swarved_mahamandir, #banarash போன்ற ஹேஷ்டேக்குகளுடன் வைரலாகும் இதே காணொலி பல்வேறு யூடியூப் சேனல்களில் பகிரப்பட்டு இருந்தன. அதில், Ankit Promo என்ற யூடியூப் சேனலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி Vlog ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில், 3:35 பகுதியில் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்றே ஒரு வெஸ்டர்ன் டாய்லட்டுடன் பொதுவெளியில் மறைவின்றி இருக்கும் கழிவறைகளின் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், காணொலியின் டிஷ்க்கிரிப்ஷன் பகுதியில் வாரணாசியில் உள்ள Swarved Mahamandir Dham என்ற இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாரணாசி வருபவர்களுக்காக உள்ள கழிவறை என்ற தலைப்புடனும் பல காணொலிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, Swarved Mahamandir குறித்து கூகுளில் தேடுகையில், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி உலகின் மிகப்பெரிய தியான மையமான Swarved Mahamandirஐ பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்று Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் என்று வைரலாகும் காணொலி உண்மையில் வாரணாசியில் உள்ள Swarved Mahamandirக்கு வந்தவர்களுக்காக தற்காலிகமாக கட்டப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.