“டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் காலில் விழுகிறார் என்று ஆரஞ்சு நிற டர்பன் அணிந்துள்ள முகம் தெரியாத சீக்கியர் ஒருவர் சோனியா காந்தியின் காலில் விழுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்பது தெரிய வந்தது. இப் புகைப்படத்தில் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2011ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் என்று Getty Images வைரலாகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அதில், “புதுதில்லியில் இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான மாநாட்டின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிரதிநிதி சோனியா காந்தியின் பாதங்களைத் தொட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இது தொடர்பான செய்தியை கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான மாநாடு தொடர்பான செய்தியை Hindustan Times 2011ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், அவர் நீல நிறத்தில் டர்பன் அணிந்துள்ளார். வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் ஆரஞ்சு நிறத்தில் டர்பன் அணிந்துள்ளார். இதன் மூலம் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது மன்மோகன் சிங் இல்லை என்பது தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் காலில் விழும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது மன்மோகன் சிங் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.