“கும்ப கர்ணனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டது, ராமாயணம் நடந்தது என்பதற்கு இதைவிட ஆதாரம் இல்லை.. ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், ராட்சத வாள்களின் புகைப்படத்தை காணொலியாக மாற்றி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் புகைப்படங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இவ்வாறாக மிகப்பெரிய வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டனவா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, ராட்சதர்கள் பயன்படுத்திய வாள் என்று இவற்றைப் போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே வைரலானது தெரியவந்தது. அவற்றை, Teyit என்ற துருக்கிய ஊடகம் ஃபேக்ட்செக் செய்து அப்புகைப்படங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று உறுதிபடுத்தி இருந்தது.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் நான்கு புகைப்படங்களையும் Truemedia (Photo 1, Photo 2, Photo 3, Photo 4) இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், நான்கு புகைப்படங்களும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்ற முடிவுகள் நமக்கு கிடைத்தன.
True Media ஆய்வு முடிவுகள்
மேலும், தொல்லியல் அகழாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வாள் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ஜப்பானின் நாரா நகரில் உள்ள டோமியோ மருயாமா புதைகுழியில் 2.3 மீட்டர் நீளமுள்ள Dakoken வாள் தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது என்று The Japan Times ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது வரை தொல்லியல் அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வாள் ஜப்பானில் கண்டெடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கும்ப கர்ணனின் வாள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் ராட்சத வாளின் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.