Fact Check: நான்கு சக்கரங்களுடன் இயங்கும் அரசுப் பேருந்து என்று வைரலாகும் காணொலி; உண்மை என்ன?

அரசு பேருந்து ஒன்று நான்கு சக்கரங்களில் இயக்கப்படுவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  2 May 2024 6:07 PM GMT
Fact Check: நான்கு சக்கரங்களுடன் இயங்கும் அரசுப் பேருந்து என்று வைரலாகும் காணொலி; உண்மை என்ன?
Claim: நான்கு சக்கரங்களுடன் இயங்கும் அரசு பேருந்து என்று வைரலாகும் காணொலி
Fact: 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காணொலி தற்போது வைரலாகி வருகிறது

“பொள்ளாச்சி டு திருப்பூர் செல்லும் பேருந்தில் பின்புறத்தில் உள்ள நான்கு சக்கரங்களுக்கு பதிலாக இரண்டு சக்கரத்தில் அரசு பேருந்து இயங்கிக் கொண்டுள்ளது. பயணிகள் அச்சத்தில் சென்று கொண்டுள்ளனர். அரசினுடைய அவலம் இந்த பேருந்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது 2019ஆம் ஆண்டு ஜுலை 2ஆம் தேதி DT Next செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆறு சக்கரங்களுக்குப் பதிலாக நான்கு சக்கரங்களில் இயங்கும் காணொலி வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், TN 38 1419 என்ற எண் கொண்ட இந்த அரசுப் பேருந்து இயங்குவதற்கு தகுதியற்றது. இதனால், இப்பேருந்து அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொள்ளாச்சியில் இருந்து காமநாயக்கன்பாளையம், சோமனூர், அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் பேருந்து டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்தின் இயக்கம் மற்றும் அதன் வழித்தடம் குறித்து ஏற்கனவே மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பயணிகள் யாரும் பயணிக்கவில்லை என்றார்” என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஈடிவி பாரத் மற்றும் Behindwoods ஆகிய ஊடகங்கள் 2019ஆம் ஆண்டு செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும், அந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நான்கு சக்கரங்களில் இயங்கும் அரசு பேருந்து என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்ற ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:தமிழ்நாட்டில் நான்கு சக்கரங்களுடன் இயங்கும் அரசுப் பேருந்து என்று வைரலாகும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட காணொலி தற்போது வைரலாகி வருகிறது
Next Story