கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், “பேரழிவு ஏற்படும் முன் இயற்கையின் அழைப்பின் பேரில் மலையிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் யானைக்கூட்டம்....மனிதன் இந்த ஞானத்தை இழந்துவிட்டான்…” என்ற கேப்ஷனுடன் யானைகள் நிலப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வருவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி பழையது என்பது தெரியவந்தது. இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, yathrakarude_sradhakku என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 12ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
வயநாடு நிலச்சரிவு ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்டது. ஆனால், வைரலாகும் காணொலி நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே வெளியிட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, தேடுகையில் wayanadan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜனவரி 12ஆம் தேதி இதே காணொலி வெளியிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வயநாடு நிலச்சரிவை முன்கூட்டியே உணர்ந்த யானை கூட்டம் அப்பகுதியைவிட்டு வெளியேறுவதாக வைரலாகும் காணொலி பழையது என்றும் அதற்கும் வயநாடு நிலச்சரிவுக்கும் தொடர்பில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.