Fact Check: சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீடு விதிமீறலா? வைரல் தகவலின் உண்மை என்ன?

சென்னை ஐஐடியில் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  27 April 2024 11:59 PM IST
Fact Check: சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீடு விதிமீறலா? வைரல் தகவலின் உண்மை என்ன?
Claim: சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீடு விதி மீறல்கள் நடைபெற்று இருப்பதாக வைரலாகும் செய்தி
Fact: 2019ஆம் ஆண்டு பெறப்பட்ட ஆர்டிஐ தகவல் தற்போது வைரலாகி வருகிறது

“ரிசர்வேசன்னு ஒன்னு இல்லைனா நம்ம MBC, BC, SC, ST நிலைமை. எப்பா ஆண்ட பரம்பரை வா வந்து OC கிட்ட சண்ட போடு இடஒதிக்கீட்ட அழிக்கனும்னு கம்பு சுத்துவியே இடஒதிக்கீடு இருக்கும்போதே (BC, OBC SC ST) எடத்த ஒருத்தன் எடுத்துட்டு போறான் இட ஒதுக்கீடுலாம் இல்லனா நீ திருஓடுதான் டீ‌‌. அது ஐஐடி இல்ல...அக்ரஹாரம்” என்ற கேப்ஷனுடன் சென்னை ஐஐடியின் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் நடைபெற்று இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் செய்தி

Fact-check:

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய வைரலாகும் தகவல் தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி The New Indian Express செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “சென்னை ஐஐடியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்களில் 684 பேர்களில் 599 பேர் பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரும், ஆர்வலருமான முரளிதரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பி இருந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், 2014 முதல் தற்பொழுது வரை உள்ள பணி நியமனம் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி, காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஓ.பி.சி பிரிவில் 66 பேர், எஸ்.சி பிரிவில் 16 பேர், எஸ்.டி பிரிவில் 3 பேர் மட்டுமே உள்ளனர். 2019-ல் வேலைக்காக விண்ணப்பித்த(எஸ்.டி, எஸ்.சி. ஓ.பி.சி பிரிவு) 271 பேரில் 5 பேர் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டு இது போன்ற விதிமீறல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதனை புதிய தலைமுறை ஊடகமும் அதே தேதியில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் இது போன்ற விதிமீறல்கள் சென்னை ஐஐடியில் நடைபெற்றதா என்று கூகுளில் தேடுகையில், 2021 ஆம் ஆண்டு இதே போன்ற விதிமீறல் நடைபெற்று இருப்பதாக The Hindu 2022ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதன் பிறகு அவ்வாறாக எந்த ஒரு விதிமீறல்களும் நடைபெற்றதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

Conclusion:

நம் தேடலில் முடிவாக சென்னை ஐஐடி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு விதிமீறல் நடைபெற்று இருப்பதாக வைரலாகும் தகவல் 2019ஆம் ஆண்டு வெளியான பழைய தகவல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:சென்னையில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தின் போது இட ஒதுக்கீடு விதிமீறல்கள் நடைபெற்றதாக வைரலாகும் செய்தி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:Misleading
Fact:2019ஆம் ஆண்டு பெறப்பட்ட ஆர்டிஐ தகவல் தற்போது வைரலாகி வருகிறது
Next Story