“வயநாடு நிலசரிவுல வீட்டோட அடிச்சிட்டு போன குடும்பம்… இறந்த நிலையிலும் தன்னோட குழந்தைய இருக்கி அனைச்ச படி தாய்.. இயற்கை அழகானது மட்டும் இல்ல... அரக்கதனமானதும் கூட…” என்ற கேப்ஷனுடன் இடிப்பாடுகளுக்கு நடுவே குழந்தையை இறுக்கி அணைத்தபடி இறந்து கிடக்கும் பெண்ணின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, riya199__ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வயநாட்டில் நிலச்சரிவு ஜுலை 30ஆம் தேதி ஏற்பட்டது, ஆனால், இப்புகைப்படம் ஜூலை 1ஆம் தேதியே பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நிலச்சரிவிற்கு முன்பே இப்பபுகைப்படம் பகிரப்பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, இப்புகைப்படத்தை ஆய்வு செய்ததில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோன்றியது. இதனால் இப்ப புகைப்படத்தை Hive Moderation என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது. தொடர்ந்து, Hugging Face இணையதளத்திலும் இப்புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்ததில் அதிலும் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றே முடிவு வந்தது.
Hive Moderation ஆய்வு முடிவு
Conclusion:
நம் தேடலில் முடிவாக வயநாடு நிலச்சரிவின் இடிப்பாடுகளுக்கு நடுவே குழந்தையை இறுக்கி அணைத்தபடி இறந்து கிடக்கும் பெண் என்று வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.