“லட்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளம் வரும் மார்ச் 4-5 தேதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ளது…” என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் அவ்வாறான கடற்படை தளம் லட்சத்தீவில் திறக்கப்பட்ட உள்ளதா என்று கூகுளில் கீவர்ட சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று(பிப்ரவரி 14) Hindustan Times செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “வரும் மார்ச் மாதம் 4-5 தேதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லட்சத்தீவில் உள்ள மினிக்காய் தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை திறந்து வைக்க உள்ளார். அவர், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் செல்வார்” என்று கூறப்பட்டுள்ளது. இதனை WIONews ஊடகமும் விரிவான செய்தியாக எக்ஸ் தளத்தில் அதே தேதியில் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Maldivian என்ற இணையதளத்தில் மாலத்தீவில் உள்ள வில்லா சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படம் என்று வைரலாகும் புகைப்படம் பதிவேற்றப்பட்ட இருந்தது. மேலும், Maldives Insider என்ற இணையதளத்திலும், “மாலத்தீவின் மாமிகிலியில் உள்ள வில்லா விமான நிலையம் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது” என்ற செய்தி ஒன்றை 2011ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இவற்றை உறுதிபடுத்தும் விதமாக கூகுள் மேம் உதவியுடன் ஜியோ லொக்கேஷன் முறையில் வைரலாகும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது இது மாலத்தீவில் உள்ள வில்லா சர்வதேச விமான நிலையம் என்பது உறுதியாகிறது.
லட்சத்தீவில் திறக்கப்பட உள்ள ஐஎன்எஸ் ஜடாயுவின் புகைப்படமோ அல்லாது அது எப்போது திறக்கப்படும் என்பது போன்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசு சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவில் லட்சத்தீவில் திறக்கப்பட உள்ள கடற்படை தளமான ஐஎன்எஸ் ஜடாயு என்று வைரலாகும் புகைப்படம் உண்மையில் மாலத்தீவில் உள்ள வில்லா சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.