திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வீடு ஒன்று இடிந்து விழக்கூடிய காட்சி சமூக வலைதளங்களில் (Archive) உண்மையான பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் போது சிலர் அதில் சிக்கக்கூடிய காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
உண்மையில் இவ்வாறான நிகழ்வு நடைபெற்றதா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, VirtuaVision என்ற யூடியூப் சேனலில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதில் இது முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தால் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று பொறுப்பு துறந்துள்ளனர்.
தொடர்ந்து, அந்த சேனலில் பதிவிடப்பட்டுள்ள ஏனைய காணொலிகளை ஆய்வு செய்கையில் வைரலாகும் காணொலியைப் போன்றே AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும், வைரலாகும் காணொலியை DeepFake-O-Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், 6ல் 4 டிடெக்டர்கள் 50% மேல் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவை தந்தன. அவற்றில் ஒன்று இக்காணொலி 100% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடடிவைத் தந்தது.
DeepFake-O-Meter ஆய்வு முடிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டதாகவும் அதில் சிலர் சிக்கியதாகவும் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.