"கென்யா நாட்டில் பழைய மின்கம்பங்களை மாற்றிப் புதிய மின்கம்பங்களைப் பொருத்தப் பொறுப்பேற்ற ஒரு நிறுவனம். மரத்திலாலான மின்கம்பத்தை மாற்றி உலோகத்திலான மின்கம்பத்தைப் பொருத்தும்போது ஓரிடத்தில் முந்தைய மின்கம்பத்தில் வாழ்ந்த மரங்கொத்தியின் வீட்டைப் பழுதுபடாமல் பாதுகாப்பாக அகற்றி புதிய மின்கம்பத்தில் பொருத்திவிட்டதாம்" என்ற தகவலுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை அறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Earthly Mission என்ற இணையதளம் இப்புகைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினாவின் கார்டோபா மாகாணத்தில் உள்ள உசாசா(Uchacha) என்ற கிராமத்தில் இருந்த பழைய மரத்தால் ஆன மின் கம்பங்களை மாற்ற முடிவு செய்துள்ளனர்.
அப்போது, அக்கம்பத்தில் மரங்கொத்தி பறவையின் இரண்டு குடும்பங்கள் கூடு கட்டி இருப்பதை திட்ட மேலாளர் குஸ்டாவோ பெர்னார்டி கண்டுள்ளார் . தொடர்ந்து, அவற்றின் வாழ்விடத்தை அழித்திடாத வண்ணம் பறவைகளின் கூட்டை மட்டும் தனியாக வெட்டி புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் ஏற்கனவே கூடு அமைந்திருந்த அதே உயரத்தில் ஊழியர்கள் இணைத்துள்ளனர்" என்ற குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைக் கொண்டு சமூக வலைதளங்களில் தேடியபோது, fmvoxuchacha என்ற வானொலியில் பணியாற்றகக்கூடிய பத்திரிகையாளர் குஸ்டாவோ ஆஸ்கார் பெருசியா(Gustavo Oscar Perusia) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இது fmvoxuchacha வானொலியின் இணையதளத்திலும் ஸ்பானிஷ் மொழியில் செய்தியாக வெளிவந்துள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரான்ஸ் டெல் வால் என்ற டச்சு ப்ரைமாட்டாலஜிஸ்ட்(Primatologist) இதே செய்தியை வைரலாகும் புகைப்படத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் டெல் வாலின் பதிவு
Conclusion:
இறுதியாக நமக்கு கிடைத்து இருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் இது அர்ஜென்டினாவில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், இது கென்யாவில் நடைபெற்றதாக தவறாக பரப்பி வருகின்றனர்.