தன் மகளிடம் தான் பட்ட கஷ்டத்தை திரையிட்டுக் காட்டும் ஜாக்கிஜான்; வைரல் காணொலியின் உண்மை பின்னணி!

தான் திரைத்துறையில் கஷ்டப்பட்ட காட்சிகளை ஜாக்கிஜான் தனது மகளுக்கு காண்பிப்பதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  4 July 2023 12:29 AM IST
தன் மகளிடம் தான் பட்ட கஷ்டத்தை திரையிட்டுக் காட்டும் ஜாக்கிஜான்

ஜாக்கிஜான், தன் மகளிடம் தான் பட்ட கஷ்டத்தை திரையிட்டுக் காட்டுவதாக வைரலாகும் காணொலி

"ஜாக்கிஜான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம்…" என்று 32 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிரபல நடிகர் ஜாக்கிஜான் தான் படப்பிடிப்பின் போது பட்ட கஷ்டங்களை அருகில் உள்ள தனது மகளுக்கு காட்டுகிறார்.

வைரலாகும் காணொலி

Fact-check:

இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, I mean என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி கடந்த ஜூன் 22ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில் "இந்தக் காட்சி Ride On(2023) என்ற திரைப்படத்தில் எடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.


Ride On(2023) என்று குறிப்பிடப்பட்டுள்ள டிஸ்கிரிப்ஷன் பகுதி

தொடர்ந்து, Ride On திரைப்படம் குறித்து கூகுளில் தேடியபோது, சீனாவில் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் ஜாக்கிஜான் Lao Luo என்ற கதாபாத்திரத்தில் நடித்ததும், அவருக்கு மகளாக Liu Haocun என்ற இளம் நடிகை Xiao Bao என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் தெரியவந்தது. இதன் மூலம் திரைப்படத்தில் வருபவர் ஜாக்கிஜானின் உண்மையான மகள் இல்லை என்பது உறுதியாகிறது.


Ride On படத்தில் நடித்த Liu Haocun

மேலும், ஜாக்கிஜானின் குழந்தைகள் குறித்து கூகுளில் தேடிய போது அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் இருப்பதும். அதில், ஜாக்கிஜான் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த Elaine Ng என்பவருக்கு பிறந்த Etta Ng மட்டுமே ஒரே மகள் என்பதும் தெரிகிறது. அவரையும் வைரலாகும் காணொலியில் இருக்கும் பெண்ணையும் ஒப்பிட்டு பார்க்கையில் காணொலியில் இருப்பது ஜாக்கிஜான் மகள் இல்லை என்பது மேலும் உறுதியாகிறது.


ஜாக்கிஜான் மகள் Etta Ng(இடது), அவரது தாய் Elaine Ng(வலது)

Conclusion:

நமது தேடலில் முடிவாக வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய ஜாக்கிஜானின் மகள் இளம் திரைப்பட நடிகை என்பதும் அவர் ஜாக்கிஜானின் உண்மையான மகள் இல்லை என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:A video claiming that Jackie Chan showed his hard work to her daughter
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story