“நாலு மனைவியும் கட்டு மரத்தின் கழகமும்” என்ற கேப்ஷனுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது நான்கு மனைவிகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் அவருக்கு மூன்று மனைவிகள் மட்டுமே என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இது தொடர்பாக தேடுகையில் கருணாநிதியின் குடும்பம் குறித்து India Today விரிவான புகைப்படம் மற்றும் கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அதன்படி, அவருக்கு பத்மாவதி அம்மாள், தயாளு அம்மாள் மற்றும் ராஜாத்தி அம்மாள் ஆகிய மூன்று மனைவிகள் தான் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வலது பக்கத்தில் மேலும் கீழும் இருக்கும் இரண்டு புகைப்படங்களில் இருப்பது அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் என்பது தெரியவந்தது.
இடதுபுரத்தில் முதலாவதாக இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி என்றும் அதற்கு கீழ் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் அவரது மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் தற்போதைய எம்பி கனிமொழி ஆகியோரின் புகைப்படம் என்று தெரியவந்தது. இதில், கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரின் இளம் வயது மற்றும் முதுமை அடைந்த இரண்டு புகைப்படங்களையும் வெவ்வேறு மனைவிகள் என்று தவறாக வெளியிட்டுள்ளனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக நான்கு மனைவிகளுடன் கருணாநிதி இருக்கும் புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் தவறானது என்றும் கருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளின் இருவேறு புகைப்படங்கள் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. அதனை தவறாக கருணாநிதிக்கு நான்கு மனைவிகள் என்று பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.