"உலகப்புகழ்பெற்ற டிசைனர். (Ms Crisda Rodriguez ) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.. மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை..." என்று கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்துடன் நீண்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக அமெரிக்க நடிகை கிறிஸ்டா ராட்ரிக்ஸ் இறப்பு குறித்த கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உண்மை என்றும், ஆனால் அவர் இறக்கவில்லை உயிருடன் நலமாக உள்ளார் என்றும் மீடியா மாஸ் என்ற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம்(மே.9) அவர் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்டா ராட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராம் பதிவு
தொடர்ந்து, வைரலாகும் பதிவில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "சோனாலி பிந்த்ரே புற்றுநோயில் இருந்து மீண்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்" என்று என்டிடிவி 2021ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயுடன் போராடிய போது தன்னை வலுவாக வைத்திருந்தது குறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார். இவருக்கு ஜூலை 2018ல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினமான 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் ஞாயிறன்று இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
சோனாலி பிந்த்ரேவின் இன்ஸ்டாகிராம் பதிவு
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் பகிரப்பட்டு வரும் பதிவில் கூறப்பட்டுள்ள கிறிஸ்டா ராட்ரிக்ஸ் இறக்கவில்லை என்பதும் அப்பதிவில் உள்ள புகைப்படம் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுடையது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.