அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா கடந்த ஜூலை 21ஆம் தேதி திமுகவில் இணைந்தார். இந்நிலையில், “அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததாக புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று தெரியவந்தது.
அன்வர் ராஜா திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவை சேர்ந்த யாரேனும் கருத்து தெரிவித்தனரா என்று கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். ஆனால், தற்போது வரை யாரும் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா
மேலும், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை என்று கூறினாரா என்று தேடுகையில் அவ்வாறாக அவர் தெரிவித்ததாக எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து, புதிய தலைமுறை இவ்வாறான செய்தியை வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதளங்களில் தேடியபோது அவ்வாறாக இந்த செய்தியும் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. மேலும், வைரலாகும் நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்றும் அது போலியானது எனவும் புதிய தலைமுறை ஊடகம் விளக்கம் அளித்துள்ளது.
போலி என்று விளக்கம் அளித்துள்ள புதிய தலைமுறை ஊடகம்
Conclusion:
நம் தேடலின் முடிவாக அதிமுகவின் மூத்த நிர்வாகி அன்வர் ராஜா திமுகவில் இணைந்ததை அடுத்து அதிமுகவில் இருந்து திமுகவிற்கு அன்வர் ராஜா போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததாக வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலியானது என்று தெரிய வந்தது.