“இந்த உயிரினத்தின் பெயர் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க ஃபிரண்ட்ஸ்” என்ற கேப்ஷனுடன் ராட்சத ஆக்டோபஸ் கரை ஒதுங்கியது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இதனை பலரும் உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. இதுகுறித்து உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியில் குறிப்பிடப்பட்டிருந்த best_of_ai_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியபோது, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
அதில், கதை ஒன்றை விவரித்து பிறகு இது கற்பனை கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவில், “AI கதை சொல்லுதல் - வித்தியாசமான கருப்பொருள்களை AI Engine கொண்டு உருவாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று முதற்கட்டமாக கூற முடிகிறது.
தொடர்ந்து, காணொலியை True Media மற்றும் Hive Moderation உள்ளிட்ட தளங்களில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், இரண்டு தளங்களிலும் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்ற முடிவைத் தந்தன.
Hive Moderation தளத்தின் முடிவுகள்
Conclusion:
முடிவாக, ராட்சத ஆக்டோபஸ் ஒன்று கரை ஒதுங்கியது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.