“கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. மிக அரிய படம்.கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. மிக பழமையான ரோம் விநாயகரை நீங்களும் ஷேர் செய்யுங்கள் அறியாதவர்க்கு” என்ற கேப்ஷனுடன் விநாயகரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Tumblr என்ற புகைப்பட இணையதளம் வைரலாகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், “விநாயகரின் உருவம், East India Coast Malabar and Coromandel, and the island of Ceylon என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Archive.org என்ற இணையதளத்தில் மேற்கண்ட புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அதன் “கிழக்கு இந்திய பேகன்களின் உருவ வழிபாடு” என்ற தலைப்பின் கீழ் 836வது பக்கத்தில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இப்புகைப்படம் இந்தியாவில் உள்ள உருவ வழிபாட்டை குறிப்பது என்று தெரியவருகிறது.
மேலும், baumanrarebooks என்ற இணையதளத்தில் இப்புத்தகம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதன்படி, “புத்தகத்தின் ஆசிரியரான பிலிப்பஸ் பால்டேயஸ், தமிழர்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் மொழி, இந்து மதம் மற்றும் அவர் பயணம் செய்து பிரசங்கம் செய்த நாடுகளின் சிவில், மத மற்றும் உள்நாட்டு நிலை பற்றிய விரிவான குறிப்புகளை எழுதியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் டச்சு அமைச்சராக இருந்தார். இலங்கையில் டச்சு காலத்தில் படையெடுத்த டச்சுப் படையுடன் யாழ்ப்பாணம் சென்றார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கிறிஸ்தவம் பிறப்பதற்கு முன்பாகவே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் சிலை என்று புகைப்படம் மற்றும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அது இந்தியாவில் உள்ள உருவ வழிபாடு குறித்து டச்சு அமைச்சர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விநாயகரின் உருவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.