Fact Check: நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்த போது மரணமடைந்தாரா? உண்மை என்ன?

ஒருவர் நின்றுகொண்டிருந்த நிலையில் கையில் பிடித்திருந்த பையைக்கூட கீழே போடாமல் மரணமடைந்தாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  18 Sep 2024 7:44 PM GMT
Fact Check: நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்த போது மரணமடைந்தாரா? உண்மை என்ன?
Claim: நின்று கொண்டிருந்தபோதே நபர் ஒருவர் கையில் பையுடன் மரணம் அடைந்தார்
Fact: இந்த தகவல் தவறானது, உண்மையில் அவர் மது போதை அதிகமானதால் இத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்

“உலகத்தில் எவ்வளவோ மரணங்களை பார்திருப்போம். அதில் ஒரு வித்தியாசமான மரணம். ஒருவர் நின்றநிலையில் கையில் உள்ள பேக் கீழே போடாமல் பிடித்தவாறு மரணம் அடைந்தார்” என்ற கேப்ஷனுடன் குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் (Archive) பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, tengrinews என்ற கஜகஸ்தான் ஊடகம் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதில்,”இக்காணொலி ஏப்ரல் 20 அன்று வெளியிடப்பட்டதையடுத்து உடனடியாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவியது. அதில் நபர் ஒருவர் உறைந்து நிற்பதை காணொலி காட்டுகிறது. அவர் பல மணி நேரம் இந்த நிலையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பின்னர் அவர் ஆம்புலன்சில் அல்மாட்டி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில், அல்மாட்டி பிராந்திய சுகாதாரத் துறை, ஏப்ரல் 19ஆம் தேதி Taldykorgan பகுதியில் இதுபோன்ற ஒரு நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தியது. மது போதையில் இருந்தபோது, அந்த நபர் போதையின் காரணமாக உடல் உறைந்த நிலைக்கு ஆளானார்(Alcoholic Stupor). பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மது மயக்கத்தில் இருந்து மீட்டுக்கொண்டு வரப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அன்றே வீடு திரும்பினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை lada என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள Alcoholic Stupor குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, மது போதை உச்சம் பெறுபவர்களுக்கு உடலில் உள்ள தசைகள் தற்காலிகமாக செயலிழந்து அசைவற்ற நிலை உண்டாகும் என்று Sunrise House Treatment Center என்ற இணையதளம் தகவலாக வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ஒருவர் நின்றுகொண்டிருந்த நிலையில் கையில் பிடித்திருந்த பையைக்கூட கீழே போடாமல் மரணமடைந்தார் என்று வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அவர் போதையால் இத்தகைய நிலைக்கு ஆளான நிலையில் சிகிச்சைக்கு பின் அடுத்த நாளே வீடு திரும்பினார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:நபர் ஒருவர் நின்றுகொண்டே உயிரிழந்ததாக காணொலி வைரலாகி வருகிறது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இந்த தகவல் தவறானது, உண்மையில் அவர் மது போதை அதிகமானதால் இத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்
Next Story