சலூனில் முடிவெட்டி முடித்த பிறகு வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் கழுத்து பகுதிக்கு மசாஜ் செய்யப்படும். அப்போது, கழுத்தில் நெட்டி முறிக்கும் போது கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு நரம்பு சேதம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக Time of India செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சலூனில் கழுத்தில் நெட்டி முறிக்கும் போது வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக காணொலி (Archive) ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலி விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, காணொலியின் இறுதியில், “இக்காணொலி கல்வி நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது” என்றும் இது ரீல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள Disclaimer
தொடர்ந்து, ஆய்வு செய்ததில் See what's new from Sanjjanaa Galrani என்று வைரலாகும் காணொலியின் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது. இதனைக் கொண்டு Sanjjanaa Galrani என்ற பக்கத்தில் ஆய்வு செய்த போது இரண்டு நாட்களுக்கு முன்பு வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், அப்பதிவிலும் இக்காணொலி விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் இதேபோன்ற பல்வேறு விழிப்புணர்வு பதிவுகள் வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சலூனில் கழுத்தில் நெட்டி முறிக்கும் போது ஒருவர் உயிரிழந்ததாக வைரலாகும் காணொலி உண்மையில் நடைபெற்றது இல்லை அது விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.