“#சென்னையில் தூக்கி போட்டாலும் தெர்மாகோலாக மிதப்பேன் அதில் ஏறி நீங்க பயணம் செய்யலாம்…” என்ற கேப்ஷனுடன் வெள்ள நீரில் தெர்மோகோல் பயன்படுத்தி ஒருவர் மிதப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இது குறித்து உண்மைத்தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஜூலை 2ஆம் தேதி Zee News ஊடகம் இந்தியில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதன்படி, “குஜராத்தில் சில நாட்களாக பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அச்சமயம், ஒருவர் தெர்மோகோல் பயன்படுத்தி நீரில் மிதந்து செல்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது. ABP ஊடகமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும், இது குஜராத்தில் நடைபெற்ற சம்பவம் என்று Zaitra என்ற பத்திரிகையாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Zaitraவின் எக்ஸ் பதிவு
Conclusion:
முடிவாக, வெள்ள நீரில் தெர்மோகோல் பயன்படுத்தி மிதக்கும் நபர் சென்னையைச் சேர்ந்தவர் என்று தவறாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், அது உண்மையில் குஜராத்தில் நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.