அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தேர்தல் பிரச்சாரத்தின் போது போராட்டக்காரர் ஒருவர் தலைக்கு பின்னால் தாக்கக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை உண்மையாகவே போராட்டக்காரர் ஒருவர் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று தாக்கினாரா என்பதை கண்டறிய இது தொடர்பாக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ABC News வைரலாகும் காணொலி தொடர்பாக காணொலியுடன் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று யாரும் டொனால்ட் டிரம்பை தாக்கவில்லை.
நமக்கு கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, அதே ABC News ஊடகம் இது தொடர்பான விரிவான செய்தியை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அதில், ஓஹியோவின் டேட்டனில் நடந்த டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் போது தாமஸ் டிமாசிமோ (32) என்பவர் தடுப்புகளை தாண்டி ட்ரம்பை நெருங்கினார். அப்போது, ட்ரம்பின் பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிகாகோவில் டிரம்ப் தனது பேரணியை ரத்து செய்த ஒரு நாளுக்குப் பிறகு இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிகழ்வின் மற்றொரு கோணக் காணொலியை Associated Press ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில் ட்ரம்பை நெருங்க முயற்சிக்கும் நபர் தெளிவாக தெரிவதை நம்மால் காண முடிகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தலைக்கு பின்னால் ஒருவார் தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.