வானில் நிலவு மிக அருகாமையில் தோன்றி சூரியனை மறைத்து அதன் ஒளியை சில வினாடிகள் மங்கச் செய்து மீண்டும் நிலவு வானில் மறைவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இந்நிகழ்வு, “நேற்று மதியம், ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் கனடா எல்லையில்…” நடைபெற்றது என்ற கேப்ஷனுடன் இது ஒரு இயற்கை நிகழ்வு இயற்கையின் அதிசயம் என்று கூறி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி கம்ப்யூட்டர் கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2021ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி The Voice of Sikkim என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், ஆர்டிக் பகுதியில் சூரியனை மறைக்கும் நிலவு என்று வெளியான காணொலி போலியானது. அது Aleskey_nx என்பவரால் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கிடைத்த தகவலைக் கொண்டு Aleskey என்ற கீவர்டைக் கொண்டு யூடியூபில் தேடுகையில், Aleksey__n என்ற யூடியூப் சேனலில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி ஷார்ட்ஸாக பதிவிடப்பட்டிருந்தது. அவர் தன்னை 3D Artist என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வைரலாகும் காணொலியைப் போன்று நிலவை வைத்து பல்வேறு காணொலிகளை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றும் காணொலி வெளியிட்டுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஆர்க்டிக் பகுதியில் நிலவு மிக அருகாமையில் தோன்றி சிறிது நேரத்தில் அது சூரியனை மறைத்து அதன் ஒளியை மங்கச் செய்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.