"என்னடா.... இப்படி பண்ணிவச்சிருக்கிங்களேயடா என கேட்டாள் திராவிட மாடல்ன்றானுக" என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், கரடுமுரடான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும் சிலர் தடுமாறி கீழே விழும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, yashtdp என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வைரலாகும் காணொலியை "ஆந்திரப் பிரதேச சாலைகளின் நிலை" என்ற கேப்ஷனுடன் ரீல்ஸாக பகிர்ந்துள்ளார். மேலும், தன்னை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தேடுகையில், santosh_poola என்ற பாஜக நிர்வாகி தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி, தெலங்கானாவின் ஜஹீராபாத் என்ற இடத்தில் நடைபெற்ற சம்பவம் என்று வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார். மேலும், அதே பதிவில் பரவி வரும் காணொலியில் உள்ள அதே காட்சிகள் தெலுங்கு பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்து இருப்பதையும் செப்டம்பர் 27ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டில் உள்ள சாலையில் நிலை என்று வைரலாகும் காணொலியில் வரும் சாலை உண்மையில் தெலுங்கானாவில் உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.