Fact Check: மிஸ்டர் பீன் கதாநாயகன் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் உள்ளாரா?

பிரபல நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் படுத்துக்கிடப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  18 July 2024 6:43 PM GMT
Fact Check: மிஸ்டர் பீன் கதாநாயகன் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் உள்ளாரா?
Claim: நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் படுத்துக்கிடப்பது போன்று வைரலாகும் புகைப்படம்
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது

“யாருக்கெல்லாம் நம்ம Mr.Bean பிடிக்கும் இளமை அது போன...அது திரும்பாது.... இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாமும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்...எல்லோருக்கும் ஒரு காலம் முதுமை வரும்” என்ற கேப்ஷனுடன் பிரபல நகைச்சுவை தொடரான மிஸ்டர் பீனின் கதாநாயகன் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் படுத்துக்கிடப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ்மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது. முதற்கட்டமாக ரோவன் அட்கின்சனின் சமீபத்திய செய்திகள் குறித்து தேடுகையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஃபார்முலா 1 பந்தயத்தின் போது மார்ட்டின் பிரண்டல் என்பவருடனான நேர்காணலை F1 Moments என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு இருந்தது. இதன் மூலம் அவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதை கூறமுடிகிறது.


எடிட் செய்யப்பட்ட புகைப்படம்

தொடர்ந்து, புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி, “The ‘haunting’ image of a man whose medical needs were deemed insufficient for free care. He died weighing 45kg. His widow has one question – ‘how ill do you have to be?’” என்ற தலைப்பில் manchestereveningnews செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தற்போது ரோவன் அட்கின்சன் என்று பரவும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அச்செய்தியில், முறையான மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தினால் பாரி என்கிற வயதான நபர் 45 கிலோ எடையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் இருப்பவரின் புகைப்படத்தில் ரோவன் அட்கின்சனின் முகத்தை வைத்து எடிட் செய்துள்ளனர் என்பது உறுதியானது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பிரபல நகைச்சுவை தொடரான மிஸ்டர் பீனின் கதாநாயகன் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் படுத்துக்கிடப்பது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:மிஸ்டர் பீன் கதாநாயகன் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் கிடப்பதாக வைரலாகும் புகைப்படம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது
Next Story