“அமெரிக்க அமைச்சர் கூறினார்: அனைத்து பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட வேண்டும். ராடி ஹலிப் என்ற முஸ்லீம் பத்திரிக்கையாளர் சிங்கம் போல் அவள் மீது பாய்ந்தார். இப்போ புரியிது, ஜீ(நரேந்திர மோடி) ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லைன்னு….” என்ற கேப்ஷனுடன் நபர் ஒருவர் மேஜை மீது பாய்ந்து பெண்ணைத் தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “கிலார்க் கவுண்டி நீதிபதியை தாக்கிய நபரின் மூழூ நீகளக் காணொலி” என்ற தலைப்புடன் Weird என்ற எக்ஸ் பக்கம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி வைரலாகும் காணொலியை பதிவிட்டு இருந்தது. தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, AP News கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “கடந்த ஜனவரி 3ஆம் தேதி லாஸ் வேகாஸில் அடிதடி வழக்கு ஒன்றின் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்த போது நீதிமன்ற மேஜை மீது பாய்ந்து கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி மேரி கே ஹோல்தஸை தாக்கினார் தியோப்ரா ரெட்டன். இதற்காக, இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. ” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “கிளார்க் கவுண்டி நீதிபதி மீதான தாக்குதல் தொடர்பான கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தியோப்ரா ரெட்டன், முதற்கட்ட விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்” என்று Fox5Vegas ஊடகம் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக "பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட வேண்டும்” என்று அமெரிக்க பெண் அமைச்சர் கூறியதற்காக இஸ்லாமிய பத்திரிக்கையாளர் அவரை மேஜை மீது பாய்ந்து தாக்கினார் என்று வைரலாகும் காணொலி தவறானது என்றும் அது உண்மையில் லாஸ் வேகாஸ் நீதிபதி ஒருவரை வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் தாக்கும் காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.