"பாக். ஆக்கிரமிப்பகுதியில் இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் மக்கள். இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடும் காட்சி" என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்றை வலதுசாரினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Gaurav Pradhan என்ற பயனர் Gab என்கிற சமூக வலைதளத்தில், "இந்துஸ்தானின்(இந்தியா) அரசியலமைப்பையும் சட்டத்தையும் பாதுகாப்பதற்காக காஷ்மீரின் குஜ்ஜார் பகர்வால் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகஸ்ட் 15(இந்திய சுதந்திர தினம்) அன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்" என்று கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தேடுகையில், Gurjar Bakarwal சமூகத்தினரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "ஜம்மு மற்றும் காஷ்மீரின் குஜ்ஜார் பகர்வால்கள் தங்களின் பட்டியல் பழங்குடி அந்தஸ்து பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். ஆயுதம் தாங்கிய எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்" என்று பதிவிடப்பட்டுள்ளது. இவற்றை உறுதி செய்யும் விதமாக மேற்கண்ட தகவல்களை பத்திரிகையாளர் சுமித் சௌத்ரியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Gurjar Bakarwal சமூகத்தினரின் எக்ஸ் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் என்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த குஜ்ஜார் பகர்வால் சமூகத்தினர் இந்திய சுதந்திர தினத்தன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.