Fact Check: ராமரின் பிறப்பு குறித்து பேசிய பெரியார்; காணொலியில் இருப்பது அவர் தானா?

ராமரின் பிறப்பு குறித்து பேசிய தந்தை பெரியார் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on  22 Oct 2024 6:00 PM GMT
Fact Check: ராமரின் பிறப்பு குறித்து பேசிய பெரியார்; காணொலியில் இருப்பது அவர் தானா?
Claim: தந்தை பெரியார் ராமரின் பிறப்பு குறித்து பேசிய காணொலி
Fact: இத்தகவல் தவறானது. அதில் இருப்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன்

“**** அந்த காலத்தில் எப்படி பேசி நம் மூத்தோர்களை மடை மாற்றி இருக்கான்....” என்ற கேப்ஷனுடன் தந்தை பெரியார் ராமரின் பிறப்பு குறித்து பேசுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இதில் பேசுபவர் இயக்குனர் வேலு பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, சிலர் அப்பதிவில் காணொலியில் இருப்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தனர்.

கிடைத்த தகவலைக் கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Thanthai Periyar TV என்ற யுடியூப் சேனலில் இயக்குனர் வேலு பிரபாகரன் பெரியாரின் வேடம் அணிந்து பல்வேறு கருத்துக்களை பேசி காணொலியாக பதிவிட்டுள்ளார்.

மேலும், வைரலாகும் காணொலியில் உள்ள ஆடியோ மற்றும் காட்சி மிகத் தெளிவாக பதிவாகி உள்ளது. இதன் மூலம் இது நவீன காமிரா கொண்டு காட்சி படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தந்தை பெரியார் பேசும் உண்மையான காணொலியை தேடியபோது, 1973ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பெரியார் தனது 94வது வயதில் கும்பகோணத்தில் பேசிய காணொலி என்று PT SANJAI என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பேசக்கூடிய உண்மையான பெரியாரின் குரலும் வைரலாகும் காணொலியில் பேசக்கூடிவரின் குரலும் வெவ்வேறாக இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.

Conclusion:

முடிவாக நம் தேடலில் ராமரின் பிறப்பு குறித்து பேசிய தந்தை பெரியார் என்று வைரலாகும் காணொலியில் இருப்பது இயக்குனர் வேலு பிரபாகரன் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:ராமரின் பிறப்பு குறித்து பேசிய தந்தை பெரியார்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. அதில் இருப்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன்
Next Story