ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் "2 years of worst திராவிட மாடல்" என்ற வார்த்தையுடன் கூடிய பதாகையை ஏந்தி நின்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "சென்னை கிரவுண்டில் கவனம் ஈர்த்த மஞ்சள் பதாகை.. கொண்டாடும் திமுகவினர்.. எழுதியிருந்த மேட்டர் இதுதான்!" என்ற தலைப்பில் கடந்த மே 6ம் தேதி ஒன் இந்தியா தமிழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், "இன்று(மே.6) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே - மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகர் ஒருவர் '2 Years of திராவிட மாடல்' என பதாகை ஏந்தியிருந்தார்" என்று தற்போது வைரலாகும் அதே புகைப்படம் இருந்தது. ஆனால் புகைப்படத்தின் பதாகையில், "2 years of திராவிட மாடல்" என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
இதன் மூலம் தற்போது பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் "worst" என்ற வார்த்தை மட்டும் எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்ததில் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
இறுதியாக, "2 years of திராவிட மாடல்" என்ற வார்த்தையை "2 years of worst திராவிட மாடல்" என்று எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.