“இதுதான் மக்களின் வரிப்பணத்தில் தினம் தினம் - நடக்கும் கூத்துகளா?” என்ற கேப்ஷனுடன் பிரதமர் மோடி போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ளது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் மக்களின் வரிப்பணத்தில் பிரதமர் மோடி போட்டோ சூட் நடத்தி வருகிறார் என்று கூற முயற்சிக்கின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதில் குறிப்பிடப்பட்டிருந்த “S.K. Photography 2.0” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அதே பெயரில் இருந்த யூடியூப் சேனலில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
அக்காணொலியை ஆய்வு செய்ததில் அதில் இருப்பவர் பிரதமர் மோடியின் சாயலில் இருக்கும் நபர் என்பதும் தெரியவந்தது. அதே நபரை வைத்து அந்த யூடியூப் சேனலில் “மோடி ஜி போட்டோ சூட்(பதிவு 1, பதிவு 2)” என்ற தலைப்பில் பல்வேறு வகையான போட்டோ சூட் காணொலிகள் பதிவிடப்பட்டிருந்தன. இவற்றைக் கொண்டு அதில் இருக்கும் நபர் பிரதமர் மோடி இல்லை என்பது உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மக்களின் வரிப்பணத்தில் போட்டோ சூட் நடத்தும் பிரதமர் மோடி என்று வைரலாகும் காணொலியில் இருப்பது மோடியைப் போன்ற நபர் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.