இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நியூஸ் தமிழ் 24x7 வெளியிட்டுள்ள செய்தியின் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் பழையது என்றும் தேர்தலின் போது தனது பதவியை ராஜினாமா செய்த பிரதமரின் செய்தி தற்போது பகிரப்படுவதும் தெரியவந்தது.
உண்மையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்துள்ளாரா என்று யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை “பிரதமர் மோடியின் ராஜினாமா ஏற்பு” என்ற தலைப்பில் நியூஸ் தமிழ் 24x7 ஊடகம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி குடியரசு தலைவரை சந்தித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
அதேபோல மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவரிடம் வழங்கி உள்ளார். இது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.
புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்கிறார் செய்தியாளர். இதன் மூலம் இது தேர்தல் முடிந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்பு தனது பதவியை பிரதமர் ராஜினாமா செய்யும் பொதுவான நடவடிக்கை என்பது புரியவருகிறது.
தூர்தர்ஷன் வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இது தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டுள்ள Doordarshan. பிரதமர் மோடி தனது ராஜினாமாவை ஜனாதிபதி முர்முவிடம் சமர்ப்பித்ததை அடுத்து ஜனாதிபதி முர்மு ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் குழுவை பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்தது புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வழக்கமான நடைமுறை என்று தெரிய வருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்துகொண்டார் என்று வைரலாகும் செய்தி தேர்தலை அடுத்து வழக்கமாக நடைபெறும் ராஜினாமா நடைமுறை என்றும் அது 2024ஆம் ஆண்டு நடைபெற்றது எனவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.