Fact check: நடிகர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன் என்றாரா தமிழருவி மணியன்?

புதிதாக அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன் என்று தமிழருவி மணியன் கூறியதாக வைரலாகும் தினமலரின் நியூஸ் கார்ட்

By Ahamed Ali  Published on  3 Feb 2024 3:42 PM GMT
Fact check: நடிகர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன் என்றாரா தமிழருவி மணியன்?

நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து தமிழருவி மணியன் கருத்து தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ் கார்டு

தமிழ் சினிமா நடிகர் விஜய் நேற்று (பிப்ரவரி 2) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவரும் எழுத்தாளருமான தமிழருவி மணியன் கூறியதாக அவரது புகைப்படத்துடன் நேற்று(பிப்ரவரி 2) தேதியிட்ட தினமலர் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “உதவுவதே மனித இயல்பு! அருமைச்சகோதரர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன்!” என்று கூறப்பட்டுள்ளது.


வைரலாகும் நியூஸ்கார்ட்

Fact-check:

இத்தகவலின் உண்மை தன்மையைக் கண்டறிய முதலில் இவ்வாறான நியூஸ்கார்டை தினமலர் வெளியிட்டுள்ளதா என்று அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். ஆனால், அவ்வாறாக எந்த ஒரு நியூஸ் காட்டையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தினமலர் தரப்பில் விளக்கம் கேட்டபோது, “அவ்வாறாக எந்த ஒரு நியூஸ் கார்டையும் தாங்கள் வெளியிடவில்லை என்றும் பரவும் நியூஸ் கார்ட் போலியானது” என்றும் நியூஸ்மீட்டருக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும், தமிழருவி மணியனை தொடர்பு கொண்டு நியூஸ்மீட்டருக்காக இது குறித்து கேட்டோம். அப்போது, “இத்தகவல் பொய்யானது, நான் அவ்வாறாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்று மறுத்துவிட்டார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக அரசியல் கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன் என்று தமிழருவி மணியன் கூறியதாக வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் வைரலாகும் தினமலரின் நியூஸ் கார்ட்டும் போலி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:Dinamalar news card states that Tamilaruvi Manian said that he will help actor Vijay in every possible way.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Next Story