Fact Check: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பரிசுத்தொகை வழங்கப்படுகிறதா? வைரலாகும் தகவலின் உண்மை அறிக

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசுத் தொகையாக ரூபாய் 5000 வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் இணைய லிங்குடன் தகவல் வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 3 July 2025 12:49 AM IST

Fact Check: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பரிசுத்தொகை வழங்கப்படுகிறதா? வைரலாகும் தகவலின் உண்மை அறிக
Claim:பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பரிசுத் தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் இணைய லிங்க்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் இணைய லிங்க் ஒரு ஸ்பேம் ஆகும்

பாஜகவின் சின்னமான தாமரையை கிளிக் செய்து ரூபாய் 5000 பரிசுத்தொகை பெறுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. மேலும், அதில் இந்த பரிசுத் தொகையை பெறுவதற்கான லிங்க் இணைப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இது ஸ்பேம் என்று தெரியவந்தது.

வைரலாகும் தகவலுடன் கூடிய லிங்கை கிளிக் செய்து பார்த்தபோது. “மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்றுதான் அனைவருக்கும் இலவச பரிசுகள் வழங்கப்படும்” என்ற தகவலுடன் சந்தேகத்திற்கிடமான இணையதளம் (Archive) ஒன்று தோன்றியது. அதில், SCRATCH HERE என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ஸ்க்ராட்ச செய்தால் நமக்கான பரிசுத்தொகை என்று குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட தொகை ஒன்று தோன்றுகிறது.


வைரலாகும் இணையதளம்

தொடர்ந்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள “உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பவும்” என்ற பகுதியில் கிளிக் செய்தால் அடுத்ததாக பேடிஎம் அல்லது போன்பே போன்ற பணப்பரிமாற்ற செயலிகள் உதவியுடன் நமக்கு கிடைக்கப்பெற்ற பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடுகிறது.

அதனை கிளிக் செய்து பார்த்தால் நாம் பிறருக்கு பணம் அனுப்பக்கூடிய பகுதி தோன்றுகிறது. இதனை அறியாமல் நமது UPI PINஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பினால் ஸ்கேமர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்றுவிடும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த பரிசுத்தொகையும் பெற இயலாது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசுத்தொகை வழங்கப்படுவதாக இணைய லிங்குடன் வைரலாகும் தகவல் ஒரு ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், இந்த ஸ்பேம் லிங்கை கிளிக் செய்து யாரும் ஏமாற வேண்டாம்.

Claim Review:பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்காக வழங்கப்படும் பரிசுத்தொகை
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் இணைய லிங்க் ஒரு ஸ்பேம் ஆகும்
Next Story