Fact Check: அண்ணாமலையை “கெடாமாடு” என்று வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட்; உண்மை என்ன?

பாஜக தலைவர் அண்ணாமலையை "கெடாமாடு" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாக புதியதலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  8 April 2024 11:16 PM IST
Fact Check: அண்ணாமலையை “கெடாமாடு” என்று வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட்; உண்மை என்ன?

அண்ணாமலையை "கெடா மாடு" என்று வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட்

Claim: அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புதிய தலைமுறை நியூஸ் கார்ட்
Fact: வைரலாகும் நியூஸ் கார்ட் போலி என்று புதிய தலைமுறை விளக்கம் அளித்துள்ளது

"ஏங்க, கெடா மாடு மாதிரி இருக்கவர ஆட்டுக்குட்டின்னு சொல்ற அளவுக்குதாங்க திமுகவினருக்கு அறிவு; திமுகவினர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்வதற்கு வானதி சீனிவாசன் பதிலடி” என்று ஏப்ரல் 3ஆம் தேதியிட்ட புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் நியூஸ் கார்ட்

Fact-check:

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவ்வாராக அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து, ஏப்ரல் 3ஆம் தேதி புதிய தலைமுறை அவ்வாறு நியூஸ் கார்டை பதிவிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம்.

அப்போது, வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள அதே புகைப்படத்துடன், “திமுகவினருக்கு என் மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களைச் செய்வார்கள்” என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டை ஏப்ரல் 3ஆம் தேதி எக்ஸ் தளத்தில் புதிய தலைமுறை(Archive) வெளியிட்டுள்ளது. இதனை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

மேலும், வைரலாகும் நியூஸ் கார்டு போலி என்றும் அவ்வாறாக புதிய தலைமுறை நியூஸ் கார்ட் வெளியிடவில்லை என்றும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில்(Archive) விளக்கம் அளித்துள்ளது.


போலி என்று விளக்கம் அளித்துள்ள புதிய தலைமுறை

Conclusion:

நம் தேடலின் முடிவாக அண்ணாமலையை “கெடாமாடு” என்று வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் போலி என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கெடா மாடு என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ் கார்ட்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:வைரலாகும் நியூஸ் கார்ட் போலி என்று புதிய தலைமுறை விளக்கம் அளித்துள்ளது
Next Story