Fact Check: இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் இஸ்லாமிய நடவடிக்கை பின்பற்றப்பட்டதா? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி?

இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின் போது ராகுல் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இஸ்லாமிய நடவடிக்கையை பின்பற்றியதாக புகைப்படம் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  19 Aug 2024 12:10 AM IST
Fact Check: இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் இஸ்லாமிய நடவடிக்கை பின்பற்றப்பட்டதா? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி?
Claim: இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின்போது ராகுல் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இஸ்லாமிய நடவடிக்கையை பின்பற்றினர்
Fact: தகவல் தவறானது வைரலாகும் புகைப்படம் சுதந்திரப் போராட்ட வீரரான கான் அப்துல் கஃபர்கானின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டது

“இந்தப் புகைப்படம் அரிதிலும் அரிது. இந்திராவின் பிணத்தின் முன் ராஹுலும், ராஜீவ் காந்தியும் கல்மா ஓதுகிறார்கள். இந்திய மக்கள் முன்பு இவர்கள் இந்துக்களாக நடிக்கிறார்கள். இத்தாலியில் கிறிஸ்தவராக இருக்கிறார்கள். காஷ்மீரத்திலும் அரபு நாடுகளிலும் இஸ்லாமியர்கள் என்று பறைசாற்றுகிறார்கள். உண்மையில் யார் இவர்கள்?” என்ற கேப்ஷனுடன் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இருவரும் இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமிய நடவடிக்கையை பின்பற்றியதாக கூறி இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் மற்றும் புகைப்படம் தவறானது என்றும் வைரலாகும் புகைப்படம் சுதந்திரப் போராட்ட வீரரான கான் அப்துல் கஃபர்கானின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Skyscapper City என்ற இணையதளத்தில் “பெஷாவரில் நடைபெற்ற பாட்ஷா கானின் இறுதி ஊர்வலம்” என்று வைரலாகும் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.

கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Nehruvian என்ற எக்ஸ் பயனர், “பெஷாவரில் கான் அப்துல் கஃபார்கானின் இறுதி ஊர்வலம். ராஜீவ் காந்தி மற்றும் பி.வி. நரசிம்மராவ் ஆகியோரைப் இப்புகைப்படத்தில் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, கான் அப்துல் கஃபார்கானின் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் பங்கேற்றனரா என்பது குறித்து தேடினோம். அப்போது, LA Times 1988ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், ராஜீவ் காந்தி இறுதிச் சடங்கில் பங்கேற்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கின் போது இந்து மத நடவடிக்கைகளே பின்பற்றப்பட்டதாக 1984ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது United Press International. இதன் மூலம் இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் இஸ்லாமிய நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின் போது ராகுல் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இஸ்லாமிய நடவடிக்கையைப் பின்பற்றியதாக வைரலாகும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது என்றும் உண்மையில் அது சுதந்திரப் போராட்ட வீரரான கான் அப்துல் கஃபர்கானின் இறுதிச்சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:ராகுல் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின்போது இஸ்லாமிய நடவடிக்கையை பின்பற்றியதாக வைரலாகும் புகைப்படம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:தகவல் தவறானது வைரலாகும் புகைப்படம் சுதந்திரப் போராட்ட வீரரான கான் அப்துல் கஃபர்கானின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டது
Next Story