சைவ உணவு உண்ணும் ஐயர் சமுதாயத்தினர் நடத்தும் உணவகத்தில் அசைவ உணவு விற்கப்படுவது போல் "ராம் ஐயர் டிபன் கடை, சைவம் மற்றும் அசைவம்" என்ற பெயர் பலகையுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய "Ram iyer tiffin shop" என்று கூகுள் மேப்பிள் தேடினோம். அப்போது, வைரலாகும் அதே பெயர் பலகையுடன் கூடிய உணவகம் சென்னை கே. கே. நகரில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, உணவகத்தின் புகைப்படங்களை கூகுள் மேப்பிள் தேடுகையில், "ராம் ஐயர் டிபன் கடை", "PURE VEG RESTAURANT" என்று எழுதப்பட்டிருந்த புகைப்படம் கிடைத்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை ஃபோட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்தபோது, அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
"PURE VEG RESTAURANT" என்று எழுதப்பட்டிருந்த புகைப்படம்
Conclusion:
இறுதியாக, நமது தேடல் மற்றும் ஆய்வின் முடிவாக "ராம் ஐயர் டிபன் கடை, சைவம் மற்றும் அசைவம்" என்று வைரலாகும் உணவக பெயர் பலகையின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது.