“அட இது வெளிநாடு இல்லைங்க, விரைவில் ஜம்மு-காஷ்மீர்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. லே மற்றும் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை இணைக்கும் ராம்பன் மேம்பாலம் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இம்மேம்பாலம் சீனாவில் உள்ள Ehan நெடுஞ்சாலை என்று தெரிய வந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Your Magazine என்ற பேஸ்புக் பக்கம், “சீனாவில் உள்ள மேம்பாலம்” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் காணொலியின் ஒரு பகுதியை புகைப்படமாக வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, தேடியதில் China Infrastructure என்ற யூடியூப் சேனலில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற தோற்றமுடைய மேம்பாலத்தின் காணொலி ஷார்ட்ஸாக வெளியிடப்பட்டிருந்தது. அதில், “சீனாவில் உள்ள Ehan நெடுஞ்சாலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலியில் இருப்பது சீனாவில் உள்ள நெடுஞ்சாலை என்று தெரியவந்தது
மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பன் மேம்பாலத்தின் உண்மையான புகைப்படம் குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, Jagran இது தொடர்பாக புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. அதில் இருக்கும் மேம்பாலமும் வைரலாகும் காணொலியில் இருக்கும் மேம்பாலமும் வெவேராக இருப்பதை நம்மால் காண முடிகிறது.
Jagran வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
நம் தேடலின் முடிவாக லே மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் ராம்பன் மேம்பாலம் என்று வைரலாகும் காணொலி சீனாவில் உள்ள Ehan நெடுஞ்சாலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.