ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் சமூக வலைதளங்களில் காணொலிகள் மற்றும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்ற கேப்ஷனுடன் காணொலி வைரலாகி வருகிறது (Archive). அதில், ரேஷன் கடையில் எடைக்கல்லை மறைத்து அவர் ஒருவர் ரேஷன் பொருட்கள் அளக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெற்றதாகவும் கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி 2017ஆம் ஆண்டு முதல் இணையத்தில் உள்ளது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2017ஆம் ஆண்டு முதல் இக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது தெரியவந்தது. இந்நிகழ்வு திருவண்ணாமலையில் நடைபெற்றதாகவும் சிலர் கோயம்புத்தூரில் நடைபெற்றதாகவும் 2017ஆம் ஆண்டு முதல் பதிவிட்டு வருகின்றனர். ஜெயா செய்தி 2018ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வு என்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இந்நிகழ்வு எங்கு நடைபெற்றது என்று சுயதீனமாக சரி பார்க்க முடியவில்லை. தொடர்ந்து குளச்சல் பகுதியில் இவ்வாறான சம்பவம் ஏதும் நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் பதிவாகவில்லை என்று தெரியவந்தது. மேலும், வைரலாகும் காணொலியை 2017ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் எடை போடுவதில் முறைகேடு நடப்பதாக வைரலாகும் காணொலி 2017ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் இருந்து வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.