2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்நிலையில், “RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு 799 ரீசார்ஜை இலவசமாக வழங்குகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யுங்கள்” என்ற தகவலுடன் இரு வேறு இணைய விலங்குகளுடன் சமூக வலைதளங்களில் (Archive) தகவல் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இது ஸ்பேம் என்று தெரியவந்தது.
ஆர்சிபி ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றதற்காக இவ்வாறு இலவச ரீசார்ஜை அறிவித்துள்ளதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு அறிவிப்பையும் ஆர்சிபி நிர்வாகம் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. தொடர்ந்து, வைரலாகும் இணைய லிங்கை (https://winzo.app.link/HVx2QjuFVTb) ஆய்வு செய்தோம்.
அப்போது, அது Winzo என்ற மொபைல் கேம் நிறுவனத்தின் இணையதளம் என்று தெரியவந்தது. மேலும், மற்றொரு இணைய லிங்கை (https://ipl-25-racharget2.blogspot.com/) ஆய்வு செய்ததில் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்று தெரியவந்தது. இதுமட்டுமின்றி நாமக்கல் மாவட்ட காவல்துறையும் வைரலாகும் தகவல் ஸ்பேம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎலில் வெற்றி பெற்றதற்காக இலவச ரீசார்ஜ் அறிவித்துள்ளதாக வைரலாகும் தகவல் ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.