லதுசாரியனர் தங்களது வீரத்தை பெண்ணிடமோ அல்லது வயதான இஸ்லாமியரிடமும் தான் காட்டுவார்கள் என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், துர்கா அணிந்துள்ள பெண்ணை பலரும் சேர்ந்து தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இந்நிகழ்வு வங்கதேசத்தில் நடைபெற்றது என்றும் அப்பெண் மொபைல் போன் திருடியதற்காக தாக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வங்கதேசத்தை சேர்ந்த Tosmin Akter என்ற ஃபேஸ்புக் பயனர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டிருந்தார். அதில்,”செல்போன் திருடும்போது சிக்கிய டிக் டாக் பிரபலம் கோஹினூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், MD Saddam என்ற ஃபேஸ்புக் பயனரும் இதே தகவலுடன் மற்றொரு கோணத்தில் வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்நிகழ்வில் உண்மை தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக வங்கதேசத்தை சேர்ந்த ஃபேக்ட்செக் ஊடகவியலாளர் Shohanur Rahman-ஐ எக்ஸ் தளத்தில் தொடர்பு கொண்டோம். அப்போது, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் தான் பதிவிட்டிருந்த பதிவை நமக்கு அனுப்பினார்.
அதில், வங்கதேசத்தில் இந்து பெண்களை ஹிஜாப் அணிய கோரி அடித்து துன்புறுத்துவதாக டிக் டாக் பிரபலம் கோஹினூர் தொடர்பான காணொலி ஏற்கனவே தவறாக பகிரப்பட்டதாகவும். இவை அனைத்தும் பொய் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், உண்மையில் இப்பெண் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இதுபோன்று பலமுறை பொதுமக்களிடையே அடி வாங்கியதாகவும் அவர் உண்மையாகவே திருடியதற்காக அடி வாங்கினாரா அல்லது டிக்டாக் கன்டென்டிற்காக இவ்வாறு நடந்துகொண்டாரா என்று தெரியவில்லை என்றும் எக்ஸ் பதிவில் தெளிவுபடுத்தி உள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்ணை தாக்கும் வலதுசாரியினர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் காணொலியில் இருப்பவர் வங்கதேசத்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கோஹினூர் எனவும் தெரியவந்தது. மேலும், அவரை பொதுமக்களும் செல்போன் திருடியதற்காக அடித்தனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.